மலேசியா : கடும் பாதிப்பில் சுயதொழில் புரிவோர் – நீட்டிக்கப்படுமா நடமாட்டக் கட்டுப்பாடு..?

mco malaysia

மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட தற்போது குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். பலருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைத்துள்ளது இந்த செய்தி அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இது ஒருபுறம் இருக்க, கடந்த 23 நாட்களாக தொடரும் பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் சுமார் 50 சதவிகித சுயதொழில் செய்யும் மக்கள் மலேசியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் பகிர்ந்துள்ளார். பெறப்பட்ட அந்த கருத்தின் அடிப்படையில் சுய தொழில் செய்யும் மக்களும் அவர்களிடம் வேலைபார்க்கும் மக்களும் தங்களிடம் இருப்பு உள்ள பணத்தை கொண்டு மேலும் ஒரு மாத காலம் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும். தங்களுக்கு இயல்பாக வரும் வருமானத்தில் தற்போது 90 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்பே அறிவிக்கப்பட்டதை போல ஏப்ரல் 10ம் தேதி தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமா..? என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் தற்போது நிலவும் சூழலில் ‘ஹரி ராயா’ நிகழ்வு முடியும் வரை தடை நீடிக்கவேண்டும் என்று நேற்று மலேசிய மருத்துவக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.