‘தீடீர் தேர்தலா, கவலை இல்லை..!! : ‘தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!’ – தேர்தல் ஆணையர்

Malaysia Election

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய அரசியல் குழப்பத்தில் சிக்கித்தவித்து வருகின்றது மலேசியா. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் இந்த அரசியல் இழுபறி நிலையில் தீடீர் தேர்தல் வரும்பட்சத்தில் அதனை முறையாக பாதுகாப்புடன் நடத்த முழு தயார் நிலையில் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தகவல் அளித்துள்ளார் தேர்தல் ஆணையர் அஸார் ஹருண். தேர்தல் ஆணையம் எப்போதும் விழிப்போடு இருப்பதாகவும் எல்லாவிதமான சூழலையும் எதிர்கொள் தயார் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை ஹருண் அவர்களுடைய தலைமையில் சுமார் 7 முறை இடைத் தேர்தல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது உலகளவில் நிலவும் கொரோனா தொற்றை மனதில் கொண்டும் அதற்கான சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடக்கும் பட்சத்தில் உரிய சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளித்தல், வாக்களிக்க வரும் மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதை. மேலும் அவளுக்கு அதிகமான உடல் வெப்பம் இருந்தால் அவர் வாக்களிக்க தனி அறை என்று பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.