டாக்டர் மகாதீர் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார் – மலேஷியா பிரதமர்

muhyiddin yassin

மிக நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு மலேஷியா நாட்டின் எட்டாவது பிரதமராக தேர்வான முகிதீன் யாசின், தனது முதல் நாள் பணியை நேற்று தொடங்கினார். மலேசிய நாட்டில் ஊழல் அற்ற அமைச்சரவையை தான் நியமிப்பதாக அப்போது உறுதிமொழி அளித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலம் உரையாற்றினார். மேலும் மலேசிய அரசியலில் நிலவிய நெருக்கடியை தீர்க்கவே தான் பிரதமராக பதியேற்றதாகவும் தனக்கு இந்த பதவி மீது ஆசை இல்லை என்றும் முகிதீன் யாசின் தெரிவித்தார் .

தொலைக்காட்சியில் நேரலையில் பேசிய மலேஷியா பிரதமர் “கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல் களத்தில் பல குழப்பம் மற்றும் கொந்தளிப்பு இருப்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள், ஆனால் எனக்கு நாட்டின் நலனே முக்கியமே அன்றி பிறருடன் மோதும் எண்ணம் எனக்கு அறவே இல்லை என்று அவர் அந்த உரையில் தெரிவித்தார். நான் பிரதமராக செயல்படும்போது எனது வேளையில் உள்ள நேர்மை எப்போதும் சந்தேகத்திற்கு இடமான ஒன்றாக மாறிவிட கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன் என்று கூறினார்.

நான் நாட்டு மக்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது “நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை, போட்டியிட்ட மற்ற இரு பிரதமர் பதிவிக்கான வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை இல்லாதபோதே நான் இந்த பொறுப்பில் பங்கேற்க முன்வந்தேன் என்று குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் திரு. டாக்டர் மகாதீர் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

பெர்சத்து, பாரிசான் மற்றும் பாஸ் கூட்டணியின் எட்டாவது பிரதமராக முகிதீன் நேற்று பதவியேற்றார். அவருக்கு சரவாக் கட்சி (ஜி.பி.எஸ்) ஆதரவும் கிடைத்தது. எவ்வாறாயினும், டாக்டர் மகாதிர் முகமட், கடந்த வாரம் முதல் முகிதீன் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். முகிதீன் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமை, நெருக்கடியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினார். முஹைதீன், ஆரம்ப நாட்களில், அவரும் அனைத்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டாக்டர் மகாதீருக்கு பிரதமராக வலுவான ஆதரவை வழங்கியதாக கூறினார்.