மலேசியாவில் தைப்பூசம் – நேர்த்திக்கடன் செலுத்த குவியும் பக்தர்கள்

thaipusam

தைப்பூச திருவிழாவிற்காக பினாங்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றது, ஏன் என்றால் பினாங் மாநிலத்தில் கொண்டாடப்படும் மிக பெரும் விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. ஏற்கனவே எல்லா வார இறுதி நாட்களில் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலிலும் பினாங்கிள் உள்ள தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபானி கோவிலுக்கும் நேர்த்திகடன்களை செலுத்த பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

தைப்பூச திருவிழாவின்போது பக்கதர்கள் காவடி, பால்குடம் போன்றவற்றை எடுத்து வருவது வழக்கம். இம்முறையும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்த பெருமளவில் வருவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இந்த தைப்பூச திருவிழாவை குறித்து கோவில் நிர்வாகம் கூறும்போது, கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு சுமார் 55,000 முதல் 60,000 பக்தர்கள் அதிகம் வரக்கூடும் என்றும், அதே போல கடந்த ஆண்டினை விட பால் குடம், காவடி போன்றவற்றை எடுத்து நேர்த்திக்கடனோடு வரும் பகதர்களின் எண்ணிகை 10 சதவிகிதம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறுகின்றனர்.

இந்தமுறை Penang Hindu Endowment Board அலுவலக வளாகத்தில் ஒரு தங்க ரதம் நிறுவப்படவுள்ளதாகவும், இதற்கான வேலைகள் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாகவும் PHEB கமிஷ்னர் குவேனராஜு கூறினார். மேலும் இந்த ரதம் தைப்பூச திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.