COVID – 19 : மலேசியாவில் 21 பேர் பலியான சோகம்

malaysia death

கொரோனா வைரஸ் பரவுதலை தொடர்ந்து கணித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றது worldometers.info என்ற இணையதளம். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 4,72,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 21,302 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 1,14,714 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேப்போல அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் இதுவரை சுமார் 1796 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல இந்த நோயின் காரணமாக மலேசியாவில் 21 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல சுமார் 199 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அந்த நிறுவனம் மலேசியாவை பொறுத்தவரை புதிதாக இந்த நோய் காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினம் தினம் மக்கள் இறப்பது அரசிற்கும் பொதுமக்களுக்கும் பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எப்போது இந்த கொரோனா தொற்று இந்த உலகை விட்டு விலகும் என்ற ஒரே எண்ண ஓட்டமே உலகில் தற்போது நிலவி வருகின்றது.