“ஆபரேஷன் பூளு டெவில்” – மலேசியாவில் குறையும் குற்றச்செயல்கள்

abdul hamid

ஒரு நாட்டிற்கு பிற நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை விட, சொந்த நாட்டில் நடைபெறும் குற்றசெயல்களால் தான் மிக பெரிய ஆபத்து ஏற்படுகிறது. இந்த சூழ்நிலைக்கு மலேசியாவும் விதிவிலக்கு அல்ல. இந்நிலையில் சென்ற ஆண்டினை விட சுமார் 7.5 சதவிகிதம் மலேசியாவில் குற்ற செயல்கள் குறைந்துள்ளதாக, அதாவது 100,000 பேருக்கு 249 பேர் என்ற விகிதத்தில் குற்றச்செயல்கள் அரங்கேரியுள்ளதாக தகவல் தெரிவிகின்றன.

மேலும் கடந்த ஆண்டு நடத்த போலீஸ் அதிகாரிகள் சந்திப்பில் இந்த விகிதம் 269ஆக குறைக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்த நிலையில் தற்போது 249ஆக குறைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, இதற்கு காரணமாக இருந்து குற்ற விசாரணை பிரிவு போலீசாரை வெகுவாக பாராட்டினார் போலீஸ் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீது. மேலும் இந்த குற்ற குறைப்பில் போதைப்பொருள் தடுப்பு போலிசார் மிக சிறப்பாக செயல் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி சுமார் 2.4 மில்லியன் ரிங்கட் மதிப்புள்ள பன்னிரண்டு டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. “ஆபரேஷன் பூளு டெவில்” என்ற சிறப்பு தனிப்படயினை போதைப்பொருள் தடுபிற்காக அமைத்து அதன் மூலம் விசாரணை மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி போலீஸ் இலாக்காவின் அணைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட, போக்குவரத்து விசாரணை அமலாக்கத்துறை சென்ற ஆண்டில் பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக 296 நபர்களை கைது செய்துள்ளனர்.