CORONA : ‘மலேசியர்கள் வெளிநாடு செல்ல தடை’ – மலேசியா அரசு

malaysia airpot

மலேசியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமான மூட மலேசியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிகப்படுள்ளது. இந்த தடை வரும் மார்ச் மாதம் 31 தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தரப்பில் இருந்து குறிபிடப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் கொண்ட நிறுவனங்கள் அனைத்து திறந்தே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியர்கள் யாரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ‘சேனல் நியூஸ் ஏசியா’ என்ற செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் மலேசியர்களும் தனிமைபடுத்தப்படுவார்கள் என்றும் தீவிர சிகிச்சைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலேசியாவிற்குள் நுழைய பிற நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்படிருப்பதாக மலேசியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

வழிபாட்டு தளங்கள், அரசு மற்றும் தனியார் வழிபாடு தளங்கள், அத்தியாவசிய பொருட்களை தவிர பிற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என்றும் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படவேண்டும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.