COVID – 19 : ‘இணைந்து செயல்பட முடிவு செய்த மலேசியா மற்றும் அமெரிக்கா..!!’ – மலேசிய பிரதமர்

Muhyiddin and Trump

நேற்று இரவு மலேசிய பிரதமரும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட அரசிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான விரிவான ஒத்துழைப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் இந்த தொலைபேசி உயரத்தில் நடந்ததாக மலேசிய பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த உரையாடலின்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “​​ஜனாதிபதி டிரம்பும் நானும் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் இரு நாடுகளும் எடுத்த அணுகுமுறைகள் குறித்து விவாதித்தோம், மேலும் தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம்” குறித்தும் பேசியதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது, இரு நாடுகளும் குறிப்பாக உலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது முக்கியமான உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை சீராக வழங்குவதை உறுதி செய்வதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளன. அதே சமயம் தடுப்பூசி தயாரிப்பில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.