COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 43 சதவிகித மக்கள் பூரண குணம்

malaysia corona

பார் முழுதும் பரவி வரும் கொரோனா காரணமாக தற்போது மலேசிய நிர்வாக தலைநகரான புத்ராஜெயாவை நேற்று ‘சிவப்பு மண்டலமாக’ (ஆபத்தான பகுதி) அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 3,77,082 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல “மலேசியா இன்று” என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மலேசியாவில் நேற்று (ஏப்ரல் 10) ஒரு நாளில் புதிதாக 118 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளகவும், அதே சமயம் ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 220 பேர் பூரண குணமடைந்துள்ளாகவும் பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்ததாக அறிவித்துள்ளது..

இதுவரை மலேசியாவில் குணமடைந்துள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1,830-ஐ எட்டியுள்ள நிலையில் குணமடைந்த மக்களின் சதவிகிதம் 43ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் மலேசியாவில் சுமார் 4,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.