கொரோனாவிற்கு எதிரான போர் – ‘மீண்டு வரும் கட்டத்தில் மலேசியா’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdulla

கொரோனா வைரஸ் பரவளில் மலேசியா இப்போது ‘மீண்டு வரும் கட்டத்தில்’ இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் மலேசியாவின் சுகாதார இயக்குனர் ஜெனரல் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தை ஒப்பிடும்போதும் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“இந்த மாத தொடக்கத்தில் மலேசியா அதன் கொரோனா பரவளின் உச்சத்தை கண்டது, உதாரணமாக அப்ரியல் 3ம் தேதி அன்று மலேசியாவில் அதிகபட்சமாக 217 புதிய பாதிப்புக்கள் பதிவாகின” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ஏப்ரல் மதத்தின் மத்தியில் இந்த நோய் உச்சம்பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இப்பொது வரை எதிர்பார்த்த அந்த உச்சத்தை மலேசியா தொடவில்லை என்றும், விதிக்கப்பட்ட கட்டுப்பட்டை மக்கள் முறையாக பயன்படுத்தியதால் பெரிய அளவில் பாதிப்பு குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இப்போது, ​மலேசியா குணமடையும் கட்டத்தில் இருக்கிறது என்ற விஷயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார். மேலும் “எங்கள் மக்களும் வளங்களும் ஒன்று சேரும்போது முடிவற்ற சாத்தியங்களை நாம் செய்ய முடியும்”, என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.