COVID – 19 : மத்திய மலாக்கா மாவட்டம் – ‘சிவப்பு மண்டலமாக அறிவிப்பு’

malacca

கொரோனா பரவலுக்கு பிறகு அண்மையில் மலேசியா தனது நிர்வாக தலைநகரான புத்ராஜயாவை “சிவப்பு மண்டலம்” (காரோண பாதிப்பு அதிகம் உள்ள இடம்) என்று அறிவித்துள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் சுகாதார அமைச்சகம் கடந்த திங்களன்று இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

மலேசியாவின் சுகாதாரத் தலைவர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் மலேசியாவில் 170 புதிய COVID-19 வழக்குகளைக் கண்டறிந்துள்ளது, இது உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் தேசிய எண்ணிக்கையை 3,963 ஆகக் அதிகரித்துள்ளது என்று அப்போது கூறினார்.

இந்நிலையில் புத்ராஜயாவை அடுத்து சிலாங்குர் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மேலும், நேற்று மத்திய மலாக்கா மாவட்டம் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை நேற்று மலேசிய சுகாதார அமைச்சின் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 44 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.