கொரோனா : மலேசியாவில் 1500ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை

malaysia coronaa

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த பூமியின் 95 சதவிகித பகுதியில் பரவியுள்ளது கொரோனா. அதாவது உலகில் உள்ள 196 நாடுகளில் சுமார் 190 நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளது. WHO அளிக்கும் தகவலின்படி இதுவரை இந்த நோயின் காரணமாக சுமார் 3,34,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 14,652 பேர் இந்த நோய் தாக்கி இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் www.worldometers.info என்ற இணையதளத்தில் வெளியான தகவலின்படி மலேசியாவில் 1518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் துரதிஷ்ட வசமாக 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 150க்கும் அதிகமானோர் தற்போது நலம்பெற்றுள்ளதாக மலேஷியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்குறிய அந்த நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மலேசியாவில் புதிதாக இந்த நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மக்களிடையே ஒரு சிறிய மனநிம்மதியினை கொடுத்துள்ளது. இருப்பினும் மக்கள் விதிக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுப்பாட்டை கடைபிடித்து முற்றிலும் இந்த நோயை அளிக்க உதவுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.