COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 53.4 சதவிகிதம் பேர் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

Noor Hisham

கொரோனா தாக்கத்திற்கு பிறகு மலேசியாவில் கடந்த சில வாரங்களாக இந்த நோயின் தாக்கம் சற்று தளர்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 16ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் சுமார் 110 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முந்தைய நாளை விட சற்று அதிகம் என்றாலும் கடந்த வார நிலவரத்தை பொறுத்தவரை மிக குறைவு என்று கூறப்படுகிறது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 119 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 2766 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 53.4 சதவிகித மக்கள் மலேசியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதுவரை மலேசியாவில் 84 பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும், மொத்தம் 5182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.