COVID – 19 : மலேசியாவில் 4228 பேர் கொரோனவால் பாதிப்பு – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

பார் முழுதும் பரவி வரும் கொரோனா காரணமாக தற்போது மலேசிய நிர்வாக தலைநகரான புத்ராஜெயாவை நேற்று ‘சிவப்பு மண்டலமாக’ (ஆபத்தான பகுதி) அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 80,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 3,32,989 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா. ‘மலேசியா இன்று’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மலேசியாவில் 109 பேர் புதிதாக இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதிப்பு எண்ணிக்கையை 4228ஆக உயர்த்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவில் 121 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர் என்றும் இது முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை 1600-க்கும் அதிகமாகி உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.