Corona : மலேசியாவை தொடர்கிறது கொரோனா – 300-க்கும் அதிகமானோர் பாதிப்பு..?

corona malaysia

மலேசியாவை பொறுத்தவரை ஒருபுறம் மக்கள் கொரோனா என்ற அரக்கனிடமிருந்து தப்பித்து வந்தாலும் மறுபுறம் மேலும் மேலும் இந்த நோயின் காரணமாக மக்கள் தொடந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மலேஷியா இன்று என்ற செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று மாலை வரை மலேசியாவில் சுமார் 428 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் சுமார் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்த நிலையில், இந்த அளவிற்கு அதிகமாக இந்த பாதிப்பு பரவ ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் உள்ள தப்லீ கூட்டம் ஒரு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிலும் சுவாச உதவி பெற்று வந்த நோயாளிகளின் அளவும் சற்று உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தப்லீ குழு பங்கேற்பாளர்கள் அனைவரும் மலேசியாவின் மாவட்ட சுகாதார மையத்தை உடனயாடிய அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களும் சுமார் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் நேற்றுவரை இந்த நோயில் இருந்து 39 குணமாகி வீடு திரும்பிய நிலையில் தற்போது மேலும் மூன்று பேர் நலமடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.