மலேசியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – 50 பேர் பாதிப்பு

corona

உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவு உள்ளது கொரோனா வைரஸ் நோய் தொற்று. கடந்த ஆண்டின் இறுதியில் ஹூபே மாகாணத்தின் தலை நகர் வுஹானில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது. வெளவால்களை உண்டு பாம்பின் வழியாக அந்த பாம்பை உண்ட மனிதர்களுக்கு இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 3000 பேரை பலிவாங்கியுள்ள இந்த கொரோனா.

இந்நிலையில் மலேஷியா இன்று என்ற செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில நாட்களாக மலேசியாவில் வீழிச்சி அடைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது மலேசியாவில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 50ஐ எட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 3ம் மட்டும் ஒரே நாளில் சுமார் 7 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த புதிய பாதிப்புக்கள் எப்படி நடந்து என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மைக்காலம் இந்த கொரோனா விஷயத்தில் மலேஷியா அரசு மிகவும் கணவத்துடன் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.