கொரோனா : மலேசியாவில் 3500-ஐ தாண்டிய பாதிப்பு எண்னிக்கை – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham

உலகம் முழுக்க பறவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றினை ஆய்வு செய்து உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் இதுவரை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. (இது களநிலவரம் அல்ல) இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை கொரோனா நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அதேபோல இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையையும் வெளியிட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் சுமார் 2,93,434 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேப்போல அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் இதுவரை சுமார் 3000க்கும் அதிகமானோர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல இந்த நோயின் காரணமாக மலேசியாவில் 63 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல சுமார் 1321 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையில் கொரோனா காரணமாக மலேசியாவில் பதிவாகியுள்ள இறப்பில் சுலாவேசி மதக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரும் அடக்கம் என்று மலேசிய சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.