மலேசியாவில் கொரோனா – கல்வி நிறுவனங்களின் விடுமுறை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர்

le bun sai

தற்போது மலேசியாவில் பரவி வரம் கொரோனா வைரஸ் குறித்து மலேசியாவின் முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய், பரவி வரும் இந்த நோயின் தீவிரத்தை முதலில் கட்டுப்படுத்துமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை அவர் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவில் தற்போது மலேசியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாகிவிட்டதாகவும் அதை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொற்றுநோயை சரிசெய்ய உடனடியாக சுகாதார அமைச்சகம் அதிக ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை களத்தில் இறக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஏன் என்றால் மலேசியாவில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 300ஐ தாண்டி விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இது மட்டும் இல்லாமல், கல்வி நிறுவனங்களை அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு மூடுமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அவர். “பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவை ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.” மேலும் எல்லாம் சமயம் மற்றும் மதம் சார்ந்து நடக்கும் கூட்டங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.