கொரோனா : மலேசியாவில் சுகாதார உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham

தற்போது மலேசியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே குரல் கொரோனா மட்டுமே. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் இந்த நோய் தொற்று ஏற்பட்டபோது 3000 கிலோமீட்டருக்கு அப்பால் வுஹனில் இருந்து இந்த நோய் நமக்கு பரவாது என்று எண்ணியிருந்த நிலையில் கடந்த ஒரு மாத கால போராட்டத்தில் சுமார் 21 உயிர்களை இழந்து தவிக்கின்றது மலேஷியா. உலக சுகாதார அமைப்பு அளித்திருக்கும் தகவலின்படி, நோவல் கொரோனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நோய் கிருமி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பும் போதுமாம் தும்மும் போதும் அந்த ட்ராப்லெட் வழியாக மட்டுமே பரவும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மலேசியாவில் 21 பேர் இந்த நோயினால் இறந்துவிட்ட நிலையில் இந்த நோயின் காரணமாக புதிய பாதிப்புக்கள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்ற ஒரே ஆறுதல் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. மேலும் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணித்து வரும் சுகாதார உறுப்பினர்கள் சுமார் 70 பேருக்கு தற்போது நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை செய்துவரும் அந்த உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாக மலேசிய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.