குழப்பத்தில் மலேசிய அரசியல் – பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 28 பேர் ஆதரவு

malaysia

மலேஷியா பிரதமர் மகாதீர் பின் முஹமது தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் கொடுத்ததற்கு பிறகு மலேஷியாவின் அரசியல் சூழ்நிலை மிகவும் குழப்பமான சூழ்நிலையில் உள்ளது. மலேசியாவின் ஜோகூர் என்றல் இடத்தில் உள்ள பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, மொத்தமாக உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 28 பேர் தங்களை ஆதரிப்பதாகக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால் அங்கு பபுதிதாக குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிப்பதாக 28 உறுப்பினர்களும் பகிரங்கமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் மலேசியாவின் அமானா கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் அதேபோல அங்குள்ள ஜனநாயக செயல் கட்சியின் 14 பேரும், அதனோடு சேர்ந்து கெ அடிலான் என்ற கட்சியைச் சேர்ந்த சுமார் 5 பேரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிப்பதாகத் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜோகூர் அமானாவின் காட்சி தலைவரான அமினோல்ஹுடா ஹசன், “நாங்கள் அனைவரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் நீடிக்கிறோம். மேலும் எங்களுக்கு 28 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.