“கோலாலம்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடரும் கட்டுப்பாடு” – பாதுகாப்பு அமைச்சர்.!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக்கட்டுப்பாடு இம்மாதம் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (CMCO Extends in KL)

தலைநகர் கோலாலம்பூர், சபா மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் வரும் 20ம் தேதி தற்போது உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும். (CMCO Extends in KL)

“மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும்.?”

அதே சமயம் அந்த 6 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மாநிலங்கள் கடந்த பயணத்திற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஒற்றை தொற்றாக உருவெடுத்தது.

மனித தவறா, வேண்டும் என்றே பரப்பப்பட்டதா என்று பல பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

உலக அளவில் பல சாதனைகளை படைத்த பல நாடுகளாலும் இந்த நோய்க்கு ஒரு தடுப்பு மருந்து கண்டறிய முடியாமல் தவித்து வருகின்றது.

போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம், பொருளாதார முடக்கம், வேலை இழப்பு என்று இந்த டிஜிட்டல் உலகம் கண்டிராத ஒரு பெரும் சரிவை இந்த பூமி கண்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும்.

மேலும் Top Glove தொழிற்சாலை மற்றும் அதன் ஊழியர்கள் குடியிருக்கும் சுற்றுப்புற பகுதிகள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் மலேசியாவில் 1600 பேருக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram