பரவும் கொரோனா – மலேசியாவின் உதவியை நாடும் சீன அரசு

MARGMA

உலகை அச்சுற்தும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவில் உள்ள வுஹன் மாகாணம், சில நாட்களுக்கு முன்பு இந்த வ்ஹான் பகுதியில் இருந்து ஒரு செவிலியார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் இந்த கொரோனா வைரசால் வுஹன் மாகாணம் முற்றிலும் முடங்கி விட்டதாகவும், மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுவதகவும் அவர் தெரிவத்தார்.

இதுவரை சுமார் 2500 பேர் மட்டுமே பாதிகப்படுள்ளதாக சீன அரசு தெரிவிகின்றது ஆனால் 90000 மேற்பட்ட மக்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கபடுள்ளதகவும், வுஹன் நகரம் முழுவதும் ராணுவக்கடுபாட்டில் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அசாதாரண சூழ்நிலையை எந்த செய்தி நிறுவனமும் காட்ட மறுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை இந்த வீடியோ குறித்து எந்த நடவடிக்கையும் சீன அரசு எடுத்ததாக தெரியவில்லை. அந்த வீடியோவின் உண்மை தன்மையும் இதுவரை அறியப்படவில்லை.

இந்நிலையில் மலேசியாவின் ரப்பர் கையுறை உற்பத்தி நிறுவனத்தின் (MARGMA) (Malaysian Rubber Glove Manufactures Association) தலைவரை சீனா அரசு தற்போது தொட்ரபு கொண்டுள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரசால் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் இதானால் அங்கு நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்த ரப்பர் கையுறைகள் அதிக அளவில் தேவைப்படுவதையும் அவர் கூறினர்.

ஆகவே மலேசியா இந்த கையுறை உற்பத்தியினை அதிகப்படுத்தி, அதை தங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்க சீனா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. WHO எனப்படும் World Health Organization, இந்த நோய் தொற்றுக்காக சீனா எடுத்துவரும் முடிவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு என்றும், விரைவில் இந்த நோய் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.