‘மலேசியாவிற்கு முதல் வெற்றி’ – முற்றிலும் குணமான கொரோனா நோயாளி

image

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வவுஹான் என்ற நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது இந்த கொரோனா எனப்படும் நோய் தோற்று. உலகம் சுகாதாரத்திற்கு சவால்விடும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது இந்த கொரோனா. சீனாவை மையமாக கொண்டாலும் சுமார் 20 நாடுகளில் இந்த நோய் தொற்று காணப்படுகிறது. அனுதினமும் இந்த நோய் பாதிப்பால் சீனாவில் பலர் இறக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக வந்த தகவலின் அடிப்படியில் சீனாவில் 500க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த வியாழன் அன்று ஒரே நாளில் சுமார் 65 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கொரோனா பலர்க்கு பிறவியும் வருகின்றது.

இந்த சூழ்நிலையில் மலேசியாவில், மலேசியார் ஒருவருக்கு இந்த நோய் தொற்று உள்ளது உறுதியானது, இந்த சோகமான நேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சுமார் இரண்டு வார காலத்திற்கும் மேலாக மலேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சீனா சிறுமி ஒருவர் கொரோனா நோயில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளார். அவர் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது என்று அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.