பயமின்றி, பாதுகாப்புடன் தைப்பூச திருவிழாவை கொண்டாடுங்கள் – அமைச்சர் மூர்த்தி

waytha moorthy

உலகம் முழுக்க உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சயாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுதான் தைப்பூசம். மலேசியாவிலும் வரும் பிப்ரவரி 8ம் தேதி இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இருப்பினும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் என்ற இடத்தில் உள்ள ஒரு சந்தையில் இருந்து பரவி உள்ள கொரோனா என்ற னாய் தொற்று சீனா மட்டும் இன்றி உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டி வருகின்றது.

உலக சுகாதாரத்திற்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ள உலக சுகாதார மையம், திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் மிகவும் கவனத்துடன் செய்யலப்பட அறிவுறுத்தி வருகின்றது. இந்நிலையில் மலேசியாவில் நடக்க உள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி பொன்னுசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் யாரும் அச்சம் இன்றி, அதே சமயம் கவனத்துடன் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு அறிவித்துள்ளார். பல லட்சம் மக்கள் கூடும் ஒரு மாபெரும் விழா ஆதலால் கூடுதல் கணவத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மக்கள் தங்கள் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும். கையுறை, முகமூடி போன்றவற்றை அணிந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.