“ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்து” : பரிசோதிக்காமல் வாங்க முடியாது..? – இஸ்மாயில் சபரி யாக்கோப்

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

மக்கள் காலை கண்விழித்து இரவு தூங்கச்செல்லும் வரை கொரோனா என்ற சொல்லை கேட்காமல் நாளை நகர்த்துவது என்பது கடினம். பூமி பந்தில் சுமார் 97 சதவிகிதம் உள்ள நாடுகளில் தனது ஆளுமையை காட்டியுள்ளது கொரோனா. இலங்கை, நியூஸிலாந்து மற்றும் வியட்நாம் போன்ற சில நாடுகளில் இந்த நோயின் தாக்கம் தற்போது பூரணமாக குறைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா இன்னும் குறைந்தபாடில்லை.

மலேசியா நாட்டை பொறுத்தவரை முழுமையும் குணமடையவில்லை என்றாலும் இந்த நோயின் தாக்கம் சிறிதளவு குறைந்தே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா “Spuntik V” என்ற தடுப்பு மருந்தை தாங்கள் கண்டறிந்துவிட்டதாகவும் அது கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய மருந்து என்றும் அண்மையில் தெரிவித்தது. ஆனால் குறைந்தது இரண்டு மாதங்கள் கூட ஒரு தடுப்பு மருந்தினை சோதிக்காமல் ரஷ்யா அரசு இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டிருப்பதற்கு பல விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பேசியுள்ள மலேசியாவின் மூத்த அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப், ரஷ்யா மருந்தை வெளியிட்டாலும் அதை உடனடியாக வாங்க முடியாது என்றும் அதை குறித்து மலேசியா முழுமையான பரிசோதனை செய்த பின்னரே அந்த மருந்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா முழுமையாக அந்த மருந்தை பரிசோதித்த பின்னரே அந்த விவகாரம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms