‘மாநிலங்களை நிபந்தனையுடன் கடக்கலாம்..!!’ – அடுத்த தளர்வை அறிவித்த மூத்த அமைச்சர்..

ismayil sabari

மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி வேறு தளர்வுகளுடன் இன்று வரை இயக்கக்கட்டுப்பாடு மலேசியாவில் அமலில் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இந்த கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், தற்போது இன்னும் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப். இதுவரை மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிலர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் (ஜூன் 1ம் தேதி) வேலை, மருத்துவம் உள்ளிட்ட அவரச தேவைகளுக்காக நிபந்தனைகளுடன் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடமாட்டத் தடை நிலவிய நேரத்தில் தங்களது வாழ்க்கை துணைகளை பிரிந்திருந்தவர்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையால் ஜூன் 1ம் தேதி முதல் மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையில் பயணத்தை மக்கள் நிபந்தனையுடன் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.