நோய் தொற்றை தடுக்கும் கைப்பட்டை..? – போலியான விளம்பரம் செய்தவருக்கு RM50,000 அபராதம்..!

corona braclet
Photo courtesy opiniojuris.org

உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் தொற்று எதிர்ப்பு மருந்தினை கண்டறிந்துள்ளதாக லண்டன் நகரை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மலேசியாவில் ஒரு நேரடி விற்பனை நிறுவனத்தின் முகவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் COVID-19 தொற்று நோயைத் தடுக்க முடியும் என்று கூறப்படும் ஒரு கைப்பட்டையை குறித்து விளம்பரம் செய்துள்ளார். இதன் மூலம் தவறான அறிக்கையை வெளியிட்டதைக் கண்டறிந்து அந்த முகவருக்கு RM50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அமலாக்க இயக்குநர் டத்துக் இஸ்கந்தர் ஹலீம் சுலைமான் கூறுகையில், முகநூல் வாயிலாக, தற்போது பரவி வரும் இந்த தொற்றை தடுக்க RM580 விலையில் தயாரிக்கப்பட்ட ஒரு கைப்பட்டை உதவும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டதாகவும். இது குறித்து வந்த புகாரினை தாங்கள் விசாரித்து ஒருவரை தற்போது கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த பெண்ணுக்கு தற்போது விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை கட்டத்தவரும் பட்சத்தில் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். hmetro என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms