மலேசியாவில் நிலவும் இக்கட்டான சூழல் : ‘காவல்துறையை குறைசொல்வது தவறு’ – அப்துல் ஹமீது படோர்

abdul hammed bador

உலகத்தின் பல நாடுகளை போலவே மலேசியாவிலும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலில் இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு சில நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. mco என்று அழைக்கப்பட்டும் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த mco நடமாடக்க கட்டுப்பாட்டை பொறுத்தவரை மக்கள் யாரும் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவை தாண்டி செல்லக்கூடாது என்பதே அதன் முக்கிய அம்சம்.

ஆனால் போலீசார் பல இடங்களில் சாலைகளில் தடைகளை அமைப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு தாங்கள் ஆளாவதாக மக்கள் காவல்துறை மேல் குறைகூறி வருவதாக மலேசிய நாட்டின் 12வது இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் கூறியுள்ளார். இந்த தடை மக்களின் நலனுக்காக வகிக்கப்பட்டுற்கும் தடை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும். அத்தியாவசிய பணி செய்யும் நபர்களை தவிர மற்றவர்கள் தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மலேசியாவில் சாலைத் பணிகளில் குறிப்பாக சாலைத் தடைகளில் பணிபுரியும் தன்னுடைய பணியாளர்களை பார்க்க இன்ஸ்பெக்டர் ஜெனரல் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.