‘மலேசியாவில் விரைவில் Bio Diesel’ – பிரதமர் மகாதீர் முகமத்

Mahathir

நம்ம சுற்றி உள்ள இந்த உலக அனுதினம் பல புதிய கண்டுபிடிப்புகளை தந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் உலகில் உள்ள பல நாடுகளில் மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சிகள் படு மும்மரமாக நடந்து வருகின்றன. எல்லாம் இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகத்திற்கு மிகவும் முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுவது இந்த மாற்று எரிபொருள் தான்.

தற்போது மலேசியாவும் இந்த மாற்று எரிபொருள் குறித்த ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது, மலேசியா வரும் 2025ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாக போக்குவரத்து துறையில் B30 எனப்படும் BIO-DIESEL திட்டத்தை செயல்படுத்தும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் நாட்டின் தேசிய தானியங்கி (Automotive) கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

இந்த B-30 எனப்படும் BIO-DIESEL குறித்த ஆராய்ச்சிகள் நடந்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அண்மைக்காலமாக உலகின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்படும் என்பது மிகவும் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. நிலவி வரும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகில் உள்ள பல நாடுகள் மாற்று எரிபொருளை நோக்கி தங்களது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றன.