‘மலேசியாவை தொடரும் கொரோனா’ – மேலும் ஒரு பெண் பாதிப்பு…

coronavirus

மலேசியாவில் மேலும் ஒரு பெண் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், 59 வயது மதிக்கத்தக்க அந்த பெண் கடந்த ஜனவரி 21ம் தேதி வுஹனில் இருந்து சிங்கபூர் வந்துள்ளார். சுற்றுலா பயணியாக அந்த பெண்மணி தந்து கணவன், மகன் மற்றும் மகளுடன் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துபோதும் அதை பெரிதுபடுத்தாமல் அவர் தனது அறையில் இருந்து ஓய்வு மட்டும் எடுத்துள்ளார். மேலும் காய்ச்சல் குறித்த மாத்திரை மருந்துகளை மட்டும் அவர் உட்கொண்டுள்ளார். ஐந்து நாட்கள் கழித்து அவருக்கு காய்ச்சல் அதிகமாகி உள்ளது, இருப்பினும் அவர் அதை கண்டுகொள்ளாமல் அருகில் இருந்து மருந்தகத்தில் இருந்து மருந்து வாங்கி உபயோகித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று (பிப்ரவரி 4) அவர் தாயகம் திரும்ப விமான நிலையம் வந்தபோது அவரால் பயணத்தை மேற்கொள்ளமுடியாத அளவிற்கு அவர் உடல் நிலை மோசமாகியுள்ளது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிகப்படுள்ளர். அங்கு அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்மணியின் கவனக்குறைவே அவரின் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.