வறுமை சொன்ன பாடம் மலேசிய தொழிலதிபர் மதுரை ஆனிமுத்தின் அன்னதானம்

Aanimuthu

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல பசியின் அருமை வறுமையில் வாடுபவனுக்கே தெரியும் என்பது நிதர்சனமான உண்மை. இக்கூற்றுக்கு சான்றாக விளங்குகிறார் மலேசிய வாழ் தமிழரான ஆனிமுத்து. சிறுவயதில் வறுமையின் பிடியில் வாடிய இவர் தற்போது வறுமை வென்று சம்பாதிக்க துவங்கிய பிறகு, தான் பெரும் பணத்தில் ஒரு பகுதியை அன்னதானம் வழங்க செலவிட்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை இளங்குன்றத்தை சேர்ந்தவர் ஆனிமுத்து. சொந்த ஊரைவிட்டு வேலை தேடி அவரது குடும்பமே மதுரைக்கு குடிபெயர்ந்தனர். கஷ்ட்டப்பட்டு தனது படிப்பை முடித்த ஆனிமுத்துவிற்கு மலேசியா சென்று இரும்பு பொருட்கள் வணிகத்தில் ஈடுபட ஒரு வாய்ப்பு கிடைத்தது, அவரும் ஆர்வத்துடன் ஈடுபட அவரின் குடும்ப நிலை ஓரளவு உயர்ந்தது.

சிறுவயதில் தான் கண்ட கஷ்டங்களை மனதில் ஆழப்பதித்த ஆனிமுத்து, வறுமையின் கொடுமையை உணர்ந்து தற்போது தான் ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியினை கொண்டு அன்னதானம் வழங்குகிறார். மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே ஏழை எளிய மக்களுக்கு வாரம்தோறும் சனிக்கிழமை பகல் 12:00 மணிக்கு சுமார் 300 பேருக்கு மதிய உணவை பொட்டலமாக வழங்கிவருகிறார் அவர்.

இந்த அன்னதான நிகழ்வு கடந்த ஜனவரிம் தேதி அன்று தனது கடந்த ஜன.,4ம் தேதி அன்னதானம் 101 வது வாரத்தை எட்டியது. தொழில் செய்ய ஆனிமுத்து மலேசியா சென்றுவிட்ட நிலையில், மதுரையில் வசிக்கும் அவரின் சகோதரர் கேசவன், இந்த பணியை ஏற்று கொள்கிறார். இதற்காக முத்தியரா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து ஆனிமுத்து கூறும்போது, முத்தியரா என்பது மலேசிய மொழியில் முத்து என்று பொருளப்படும். முத்துக்கு என்றுமே மவுசு அதிகம் என்பதால் அந்த பெயரில் நிறுவனத்தை துவங்கி அன்னதானம் வழங்குகிறோம் என்றார். இந்த அன்னதாம் அளிக்க வாரம் ரூ.10 ஆயிரம் செலவாகிறது. பாதுகாப்பு கருதி மருத்துவமனை வளாகத்திற்குள் வழங்க அனுமதி மறுத்து விட்டனர் என்றும் கூறினார்.

எதுவாகினும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் வந்து உணவை வாங்கி செல்வது மகிழ்த்தளிக்கிறது என்று கூறினார். மேலும் இனி வரும் காலங்களில் இந்த அன்னதான நிகழ்வை வாரம் இருமுறை நடத்த திட்டமிட்டுள்ளார். அதுமட்டும் இன்றி வருடத்துக்கு ஒருமுறை ரத்ததான முகமும், இலவச பொது சிகிச்சை முகமும் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.