மலேசியாவில் உல்லாசப் பூங்காக்கள் திறக்க அனுமதி..? – அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப்..!!

Ismail

மலேசியாவில் தற்போது கொரோனா பரவளின் அளவு குறைந்து வருவது மக்களிடையே பெரிய அளவில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மலேசியாவில் கொரோனா காரணமாக எந்தவித இறப்பும் பதிவாகவில்லை என்பது பெரிய அளவு நிம்மதி அளித்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்த சுமார் 96.7 சதவிகிதம் பேர் மலேசியாவில் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் கடந்த சில வாரங்களாக பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உல்லாச பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பாத்துரை அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அவர்கள் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலேசியாவில் சுமார் 50க்கும் அதிகமான உல்லாச பூங்காக்கள் இருபத்ததாகவும் அதில் 10,000க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மலேசியாவில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.