மலேசியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா – அதிகமாகும் பாதிப்பு

malaysia

உலகம் முழுவதும் கொரோனா நோய் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தற்போது இந்த நோய் தொற்று பரவியுள்ளது. மலேசியாவில் கடந்த சில நாட்களுக்கு மும்பு மலேசிய கொரோனாவை எதிர்த்து நல்ல நிலையில் போராடி வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மலேசியாவில் சுமார் ஏழு பேருக்கும், அதே வாரம் புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சகம் தற்போது உறுதி செய்துள்ளது.

சீராக சென்ற குறைந்து வந்த இந்த நோய் தொற்று எப்படி திடீரென அதிகமானது என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த நோய் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியும் தற்போது துவங்கியுள்ளது. இந்த பணியில் தற்போது சுமார் 215 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த பரிசோதனைகளில் தற்போது 16 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல 19 பேருக்கு கிருமித்தொற்று இல்லை என்றும் தெரியவந்துள்ளது. திடீரென கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மலேசிய மக்களை சற்று பீதியில் ஆழ்த்தி இருப்பது மறுக்கமுடியாத உண்மை