கொரோனா வைரஸ் – மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 சீனர்கள்

corono virus

பல காலகட்டங்களில் மனிதர்களை பக வகையான நோய்கள் அச்சுறுத்தி வருகின்றன, இம்முறை அந்த அச்சுறுத்தும் பணியை செய்து வருகின்றது ‘கொரோனா’ எனப்படும் வைரஸ். வவ்வால்களிடம் இறந்து பரவுவதாக கருதப்படும் இந்த நோய் சினாவினை பிறப்பிடமாக கொண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலகட்டத்தில் சீனாவில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் தற்போது மலேசியாவின், ஜோஹோர் மாகாணத்திற்கு சுற்றுலா வந்த எட்டு சீனர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு, அவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்தாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த நிலை குறித்து பேசிய மலேசிய நாட்டின் துணை சுகாதார அமைச்சர் ‘லீ பூன் சே’ கடந்த திங்கள் அன்று மலேசிய வந்த எட்டு பேர் கொண்ட குழுவில் 65 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு ஒரு கொடிய வைரஸ் தோற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவரோடு சுற்றுலா வந்த சக பயணிகள் அனைவரையும் தற்போது தனிமை படுத்தி அவர்களுக்கும் இந்த நோய் தோற்று உள்ளதா என்று பரிசோதனை செய்துவருவதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.

இதனை அடுத்து Air Asia மற்றும் Malindo விமான சேவை நிறுவனங்கள் தற்காலிகமாக தங்களது விமானங்களை வுஹன் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலே நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர். இந்த இரு இடங்களும் கொரோனா நோய் தோற்று அதிகம் உள்ள இடங்களாக கருதப்படுபவை  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பரவும் இந்த வைரஸ் நோயால் மலேசியா மட்டும் இன்றி உலகில் உள்ள பல நாடுகள் தங்கள் ஊர்களில் உள்ள விமானநிலையங்களில் வந்து இறங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு, இந்த கொரோனா வைரஸ் நோய் தோற்று உள்ளதா என்பதை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.