இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய 96 மலேசியர்கள் – இந்திய அரசுக்கு நன்றி சொன்ன அமைச்சர்..!!

Malaysians from India
Image tweeted by KKMPutrajaya

தற்போது உலகம் முழுதும் கொரோனா நோயின் காரணமாக ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. மலேசியாவின் அண்டை நாடான இந்தியாவிலும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொரோனா நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது அப்போது உறுதியானது.

 

இந்நிலையில் இந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவில் சிக்கித்தவித்த 96 மலேசியர்களை மீட்க மலேசிய அரசு பல நாட்களாக நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது கடந்த வெள்ளியன்று இந்திய அரசின் உதவியோடு மலேசியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் விளைவாக 96 பயணிகள் மட்டும் சில பணியாளர்களுடன் மலிண்டோ ஏர் விமானம் மூலம் அவர் தாயகம் அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்கள் அரசு உத்தரவுப்படி 14 நாட்கள் கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms