COVID – 19 : சரவாக் பகுதியில் அதிகரிக்கும் தொற்றின் அளவு..? – சுகாதார அமைச்சகம் தகவல்..!

Sarawak Malaysia
Picture Courtesy thestar.com.my

மலேசியாவில், உள்ளூரில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்து தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாட்டில் உள்ளூர் தொற்று இருந்த நிலையில் பலரும் நிம்மதி பெருமூச்சு அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளூரில் தின்னும் தொற்றின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இன்று மலேசியாவில் (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலேசியா திரும்பியவர்கள்) 21 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சரவாக் பகுதியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்றும் சரவாக் பகுதியில் மட்டும் 8 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மலேசியாவில் மீட்சிக்கான கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில் பல பொருளாதார துறைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms