COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 77.4 சதவிகிதம் பேர் நலமடைந்துள்ளனர் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdulla

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 16 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் (இதுவரை பதிவனத்தில் மிகக்குறைந்த அளவு) என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6742 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 110 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 5223 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 77.4 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் நேற்று நல்வாய்ப்பாக யாரும் மலேசியாவில் கொரோனா காரணமாக பலியாகவில்லை என்றும், இதுவரை மலேசியாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் எண்னிக்கை 109ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.