கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் மெல்ல மெல்ல குறைந்த வருவதால், மலேசியாவில் பெரும்பாலான பொருளாதாரத் துறைகள் திங்கள்கிழமை (மே 4) முதல் சுகாதார நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தனது தொழிலாளர் தின சிறப்பு அறிக்கையில் அண்மையில் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் இன்று முதல் பொருளாதார துறைகள் திறக்கத் தொடனாகியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பெரிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சுமார் 44 நாட்கள் கழித்து மே தினத்தன்று பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் மே 4ம் தேதி முதல் தளர்வுகள் இருக்கும் என்பதை தெரிவித்தார்.
இந்நிலையில் மலேசியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கடந்த 2ம் தேதி மலேசிய சுகாதார அமைச்ச இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மலேசியாவில் 6 மாநிலங்களில் இந்த பொருளாதார துறைகள் திறக்காமல் ஏற்கனவே நிலவும் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 6 மாநிலங்கள் பின்வருமாறு சபா, சரவாக், பின்னான்கு, பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகியவை ஆகும்.