மலேசியாவில் இருந்த 513 இந்தோனேஷிய தொழிலார்கள் : பத்திரமாக தாயகம் அனுப்பப்பட்டனர்

kualamanu

மலேசியாவில் கொரோனா பரவலுக்கு பின்பு நடமாட்டக் கட்டுப்படும் போக்குவரத்துக்கு தடையும் விதிக்கப்பட்டதால், பிற நாடுகளில் இருந்து வந்த சிலர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றுக் குறித்து அனைத்து தெளிவான தகவல்களும் வழங்கப்பட்ட பின்னர் தற்போது 513 இந்தோனேசிய வீட்டுத் தொழிலாளர்கள் அவர்களது நாட்டுக்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேடன் துறைமுக சுகாதார ஆணையத்தின் தலைவரான பிரியாகுங் ஆதி பாவோனோ, ஒவ்வொரு இந்தோனேசிய தொழிலாளருக்கும் டெலி செர்டாங்கில் உள்ள குலனாமு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த முழுமையான சோதனை செய்யப்பட்டும், அதன் பிறகு அவர்களுக்கு தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

“திருப்பி அனுப்பப்பட்ட வீட்டுப் பணியாளர்களில் எவருக்கும் கொரோனா குறித்த எந்த அறிகுறிகளும் இல்லை என்பதை ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. அவர்கள் அனைவரும் நலமோடு இருக்கிறார்கள்”, என்று பிரியாகுங் கடந்த சனிக்கிழமை என்று தெரிவித்தார். தற்போது சோதனை முடிந்து 513 தொழிலார்கள் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.