COVID 19 – நேற்று மலேசியாவில் ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

coronavirus

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நிலவு வருகின்றது. ஆரம்ப நிலையில் அதிக அளவில் நோய் தொற்றை சந்தித்து வந்த மலேசிய தற்போது மிக குறைந்த அளவிலேயே புதிய பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றது. மேலும் தினமும் மலேசியாவின் கொரோனா குறித்த தகவல்களை மலேஷியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்து வருகின்றார்.

நேற்று ஏப்ரல் 22ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் 50 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தொற்று பரவ தொடங்கி நாளில் இருந்து பதிவான அளவில் இதுவே மிகக் குறைந்த அளவும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 3400க்கும் அதிகமானாக மக்கள் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 61.7 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் மலேசியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியாவில் கொரோனா காரணமாக இதுவரை 93 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5532 என்பது குறிப்பிடத்தக்கது