Vante Bharath : தடுப்புக்காவலில் இருந்த 44 இந்தியர்கள் – சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்புகின்றனர்..!

KL to Delhi
Image tweeted by India in Malaysia

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் என்ற நகரில் இருக்கும் ஒரு இறைச்சி அங்காடியில் பிறந்தது கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு வைரஸ் தொற்று. அந்த ஒற்றை தொற்று இன்று 18,999,988 என்ற மாபெரும் தொற்றாக மாறியுள்ளது, தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக சுற்றுலா மற்றும் இதர காரியங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் ஆசியா விமானங்களை இயக்கி 500-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதில் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மற்றும் அதற்கான டிக்கெட் பெரும் முறைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மலேசியாவில் தடுப்புக்காவலில் இருந்த 44 இந்தியர்கள் வந்தே பரத் திட்டம் மூலம் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms