COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 5820 பேரில் 3957 பேர் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

உலகம் முழுக்க பறவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றினை ஆய்வு செய்து உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் இதுவரை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. (இது களநிலவரம் அல்ல) இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை கொரோனா நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 9,23,448 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 40 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 5820 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மட்டும் 95 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 3957 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 68 ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் இறந்த நிலையில் மலேசியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 99 ஐ எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.