தாயகம் திரும்பும் மலேசியர்கள் : 271 மையங்கள் – தனிமைப்படுத்துதலில் 19,262 பேர்..!!

quarantine centre

உலக முழுக்க கொரோனா பரவத் தொடங்கி சுமார் 6 மாதங்கள் கடந்து விட்டன. இந்த பரவல் காரணமாக சுமார் 3 மாதத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்களை தற்போது தாயகம் அழைத்துவந்துகொண்டிருக்கிறது மலேசிய அரசு. இது ஒருபுரம் இருக்க இந்த கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் இயக்கக் கட்டுப்பாட்டால் மலேசியா முழுவதும் சுமார் 7000 மாணவர்கள் தங்கள் பயிலும் கல்விமைய விடுதிகளிலே உள்ளனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதே சமயம் இதுவரை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாத்திரமாக தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார். அதே சமயம் கடந்த மாதம் தொடங்கிய இந்த மீட்பு பணியில் இதுவரை சுமார் 40 ஆயிரம் மலேசிய குடிமக்கள் தாயகம் அலைவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மலேசியா முழுவதும் சுமார் 271 மையங்களில் 19,262 பேர் தற்போது தனிமைப்படுத்துதலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.