COVID – 19 : மலேசியாவில் பரவும் கொரோனா : 23 வயது இளம் பெண் மரணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdulla

உலகம் முழுக்க பரவி வரும் இந்த கொரோனா தொற்று 90 சதவிகிதம் வயதானவர்களை தான் பாதிக்கின்றது என்ற ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. வயது முதிர்ந்தவர்களுக்கும் அதிக அளவு எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் தான் இந்த நோய் வரும் என்று பலரும் நினைத்து வருகின்றனர். இந்த நிலையில் மலேசியாவில் நேற்று 23 வயதான ஒரு இளம்பெண் ஒருவர் இந்த கொரோனா அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி இறந்துள்ளார்.

நேற்று மரணித்த அந்த பெண்ணிற்கு ஏற்கனவே தைராய்டு நோய் இருந்தது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும் இந்த பெண்ணுக்கு கூச்சிங் சரவாக் தேவாலய கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் இருந்து கொரோனாதொற்று பரவியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த பெண் பிப்ரவரி 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற Good News Fellowship கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி அந்த பெண் சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும். துரதிஷ்ட வசமாக அந்த பெண் நேற்று காலை 9.45 மணியவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.