“மலேசிய குடிநுழைவு மையத்தில் இருந்த 219 இந்தியர்கள் – சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினார்”

Indians in Malaysia
Image Tweeted by India in Malaysia

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு புக்கிட் ஜலில் மையத்தில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் கோவிட் 19 தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவருடைய இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தற்போது ஆய்வக அமுடிவுகளுக்காக காத்திருக்குறோம் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில் மலேசிய குடிநுழைவு மையத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கிய இந்திய தூதரகம் நேற்று இரண்டு சிறப்பு விமானங்களில் பஞ்சாப் மற்றும் அம்ரிஸ்டர் ஆகிய இடங்களுக்கு 219 இந்திய பிரஜைகளை அனுப்பிவைத்துள்ளது.

Related posts

“தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” – கோரிக்கை விடுத்த முன்னாள் பிரதமர்..!

Editor

COVID – 19 : ‘மலேசியாவில் 12 வயதிற்கு உட்பட்ட 250க்கும் அதிகமான சிறுவர்களுக்கு நோய் தொற்று..!!’

Web Desk

‘பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ – மலேசிய ஏர்லைன்ஸ்

Web Desk