1412 இந்தியர்கள் உள்பட 21,241 அந்நியநாடு பிரஜைகள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் – உள்துறை அமைச்சர்..!

hamzah-zainuddin
Picture Courtesy thesundaily.my

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர். மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்தியர்கள் உள்பட சுமார் 200 சட்டவிரோத குடியேறிகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுட்டள்ளனர். இது குறித்து பேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் பெட்டாலிங் ஜெயாபகுதியில் இருந்து இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 200 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 8 மாதத்தில் மட்டும் கைது செய்யப்பட்ட சுமார் 21,241 அந்நியப் பிரஜைகளில் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாயகம் அனுப்பிவைக்கப்பட்ட 21,241 நபர்களில் 1,412 இந்தியர்கள் மற்றும் 991 பாகிஸ்தான் பிரஜைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms