மிரட்டிய கொரோனா – மீண்டு வந்த மலேசியா : நலம் பெற்ற 18 பேர்

noor hisham abdullah

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்தே, கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. சீனாவில் இதுவரை சுமார் 2000-க்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் காரணமாக மலேசியாவில் சுமார் 22 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய மருத்துவர்கள் மற்றும் மலேசிய அரசின் முயற்சிகளால் கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு நோயாளி இந்த கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். தற்போது இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 நபர்கள் 18 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மீதமுள்ள நான்கு பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கொரோனவால் பாதிக்கப்பட்டு, அலோர் செடார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது மலேசிய பெண்ணுக்கு தான் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.