மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் – ‘179 பயணிகளுடன் கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம்’

malaysia to kochi

கொரோனா காரணமாக உலகம் முழுக்க போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உள்ளூர் போக்குவரத்து தொடங்கி வெளியூர் மற்றும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது வரை அனைத்து வகை பயணமும் முற்றிலும் தடைபட்டது. இதனால் பல நாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் உலகின் பல நாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியா பிற நாடுகளில் சிக்கி தவித்த மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் அதே நேரத்தில் பிற நாடுகளை சேர்ந்த மக்களையும் அவர்களுடைய தாய்நாட்டிற்கு பாத்திரமாக அனுப்பிவைத்து வருகின்றது. இந்நிலையில் “வந்தே பாரத் மிஷன்” என்ற மிஷனின் அடிப்படியில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இரண்டு குழந்தைகள் உள்பட மொத்தம் 179 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் கொச்சி வந்தடைந்த 179 இந்தியர்களுக்கும் தவிர கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டு தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.