மிரட்டுகிறது கொரோனா – மலேசியாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

Noor Hisham Abdullah

ஹுபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹான், இந்த வுஹான் தலைநகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு சந்தையில் இருந்து பரவியதாக கருதப்படுகிறது இந்த கொரோனா எனப்படும் நோய் தொற்று. சீனாவில் இந்த நோய் தாக்கி சுமார் 800 பேர் இறந்துள்ளதாக ஹுபெய் மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

ஹாங் காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இருவர் இந்த நோய் தொற்றால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவது இருபது நாடுகளில் பரவி உள்ள இந்த நோய் உலக சுகாதாரத்தை அவசர நிலைக்கு தள்ளியுள்ளது.

மலேசியாவில் ஏற்க்கனவே இந்த நோய் 16 பேரை பாதித்துள்ள நிலையில் தற்போது 65 வயதான இன்னொரு மலேசிய பெண்மணி இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சுகாதார துறை அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் மலேசியாவில் கொரோனா பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இருப்பினும் அரசு இந்த நோயை முற்றிலும் தடுக்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார துறை அமைச்சகத்தின் தலைவர் டாக்டர். நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.