கொரோனா நோய் தொற்று – மலேசியாவில் 16 பேர் பாதிப்பு

malaysian 16 people

கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் என்ற நோய் தாக்கி அங்கு சுமார் 773 பேர் இறந்தனர். ஆனால் தற்போது சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா நோய் சார்ஸ் நோயினை மிஞ்சியுள்ளது. சீனாவில் இதுவரை இந்த கொரோனா நோய் தாக்கத்தால் சுமார் 800 பேர் இறந்துள்ளனர்.

உலக சுகாதாரத்திற்கு அவரச நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைச்சகம், இந்நிலையில் அண்மையில் வந்த தகவலின் அடிப்படியில் சீனா மட்டும் இன்றி 20 நாடுகளில் இந்த கொரோனா நோய் தொற்று பரவி உள்ளது. இந்நிலையில் மலேசியா வந்த மேலும் ஒரு சீனா பெண் பயணிக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வுஹனில் இருந்து வந்த ஒரு பயணிக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு பயணி பாதிக்கப்பட்டுள்ளது மலேசியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மலேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.